நெல்லை மாவட்டம் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் சீரான நீர்வரத்து நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து மிதமான சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் இன்று காலை ஐந்தருவியில் தண்ணீர் கொட்டியது. காலை முதல் மாலை வரை வெறும் பாறையாகக் காட்சியளித்த மெயினருவியில் மாலை நேரத்திற்கு பிறகு பெய்த தொடர் மழையால் தண்ணீர் வரத் தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் வரத்தும் அதிகரித்துள்ளதுஇன்று பகல் முழுவதும் இடையிடையே பெய்து வரும் சாரல் மழையில் நனைந்துகொண்டே சுற்றுலா பயணிகள் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.தென்காசி குற்றாலம் பகுதி வரும் வெளியூர் வாசிகள் மிகுந்த குதுகலத்துடன் செல்கின்றனர்
வீடியோ காணhttps://www.youtube.com/watch?v=AdlkRuajF4I
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்