20 ஆயிரம் தொண்டர்களுடன் முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா
அ.ம.மு.க அமைப்புச் செயலாளராக இருந்தவர் இசக்கி சுப்பையா. தற்போது இவர், அக்கட்சியிலிருந்து விலகி வரும் 6-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைகிறார்
இது குறித்து குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, வரும் 6-ந்தேதி அதிமுகவில் 20 ஆயிரம் தொண்டர்களுடன் இணைகிறேன். மக்களின் முதல்வராக பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் மீண்டும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். எனக்கு பாஜக மற்றும் திமுகவில் இருந்து அழைப்பு வந்தது, உடன் இருந்தவர்கள் விருப்பத்தின் பேரில் அதிமுகவில் இணைகிறேன் டி.டி.வி என்னை கிண்டல் செய்கிறார் 48 நாள் அமைச்சர் என்கிறார்,மண்டல அமைச்சர் என்கிறார்,பாதாள சாக்கடை காண்ட்ராக்டர் என்கிறார் காண்டிராக்ட் எனது தொழில்,மற்றும் அரசுக்கு 72 கோடி பாக்கி இருக்கு என்கிறார்,நான்கு சுவற்றுக்குள் வைத்து சொன்ன விஷயத்தை ஊர் அறிய சொல்கிறார் ,ரகசியமாக சொன்ன செய்தியை வெளியில் சொல்வது தலைவருக்கு அழகா?,எல்லோரையும் கிண்டல் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்,என்னை இவர்தான் அறிமுகம் செய்ததாக சொல்லிக்கொண்டு வருகிறார்,அப்போது இவர் கட்சியில் இருந்தாரா தெரியவில்லை,அமமுக கட்சி அலுவலகம் எனது மகன் பெயரில் உள்ள இடம்,அதன் ஒப்பந்த காலம் குறித்து எனது மகன் நல்ல
முடிவை எடுப்பார்என்றார் அடிக்கடி டிடிவி சார்,எங்க சார் என்றே சொல்லிக்கொண்டு இருந்தார்,பேட்டியின் போதுநெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்,இன்று அமாவாசை என்பதால் நாள் நேரம் பார்த்ததே செய்தியாளர்களை சந்திக்க வந்தார் 11.07 க்கு வந்தவர் பேட்டியை 11.09க்கு துவக்கினார்
More Stories
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சிறப்பு மருத்துவ முகாம்
சுகாதாரம், நோய்த்தடுப்பு மருத்துவ முகாமினை ஆட்சியர் பார்வையிட்டார்கள்
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த்திற்க்கு மிகப் பிரம்மாண்ட வரவேற்பு