அம்மா மக்கள் முன்னேறக் கழகத்தில் இருந்து முன்னாள் சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா தனது ஆதரவாளர்கள் 20ஆயிரம் பேருடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,துணை முதல்வர் ஒ.பி.எஸ் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இணைகிறார் ,இதற்காக தென்காசியில் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கல்யாணம் மண்டப திடலில் நடைபெற உள்ளது ,முதல்வர் துத்துக்குடி க்கு விமானத்தில் வந்து அங்கிருந்து காரில் தென்காசி வருகிறார் ,தென்காசி வரும் முதல்வருக்கு ஆலங்குளத்தில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார் இதற்காக திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரை கட்சிக் கொடி ,தோரணம் என களைகாட்டிவருகிறது .மேலும் ஆலங்குளத்தை அடுத்து பாவூர்சத்திரத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் வரவேற்பு அளிக்கிறார் ,பின்னர் அங்கிருந்து முதல்வர் நேராக விழா மேடைக்கு செல்கிறார்
More Stories
சிறப்பு மருத்துவ முகாமினை நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சிறப்பு மருத்துவ முகாம்
சுகாதாரம், நோய்த்தடுப்பு மருத்துவ முகாமினை ஆட்சியர் பார்வையிட்டார்கள்