December 2, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மரபின்மைந்தன் முத்தையாவுக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான தமிழக அரசின் விருது

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதுகள் வரிசையில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான  விருது மரபின்மைந்தன் முத்தையாவுக்கு வழங்கப்படுகிறது.

2020 ஜனவரி இருபதாம் நாள் சென்னையில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விருதை வழங்குகிறார். இந்த விருது ரூபாய் ஒரு இலட்சம் காசோலையும் பாராட்டுப் பட்டயமும் கொண்டது.

இதுவரை 70 நூல்கள் எழுதியிருக்கும் மரபின் மைந்தன் முத்தையா 14 மொழிபெயர்ப்பு நூல்கள் படைத்துள்ளார். இவற்றில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் நூல்கள், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அருட்செல்வர் டாக்டர் நா மகாலிங்கம் அவர்களின்  பிசினஸ் மந்த்ரா,திரு.விக்டர் டேனியல் தொகுத்த  Don t mess around போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவை தவிர ஃபெலிஸியா டி.ஹெமன்ஸ், எச்.டபிள்யூ லாங் ஃபெல்லோ .கலீல் கிப்ரான் .ஆகியோர் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். ஈஷா யோகமையத்தில் ஆதியோகி திருவுருவச் சிலை திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த மாண்புமிகு  பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோதி  அவர்கள் உரையை இவர் மொழிபெயர்த்தார். அத்துடன்’ஒவ்வோர் ஆண்டும் மஹாசிவராத்திரி நிகழ்வில் சத்குரு அவர்கள் ஆற்றும் உரையினை இவர் மொழிபெயர்த்து வருகிறார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது .எஸ்.ஆர்.எம்.தமிழ்ப்பேராயம் வழங்கிய பாரதியார் கவிதை விருது கவியரசர் கண்ணதாசன் விருது, பொற்றாமரை இலக்கிய விருது உட்பட15க்கும் மேற்பட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்

You may have missed

error: Content is protected !!
Open chat