தென்காசிமாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் மாசிலாமணி பாவூர்சத்திரம் காவல் நிலையயத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் அளித்துள்ளார்
அந்த மனுவில்,
தந்தை பெரியார் குறித்து கடந்த 14.01.2020 அன்று சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார்.. இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153A மற்றும் 505 OF IPC பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.. என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
அதென்ன 153A மற்றும் 505 OF IPC சட்டம்
இரண்டு சமூகங்களுக்கிடையே மோதல் உருவாக்கி அதன் மூலம் கலவரத்தை உருவாக்குவதும் , இரண்டு மதங்களுக்கிடையே தேவையற்ற , ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி மத மோதலை உருவாக்குபவர்கள் மற்றும் கெட்ட எண்ணத்துடன் வேண்டுமென்றே உண்மைக்கு மாறான செய்தி என்று தெரிந்தும் கூட வதந்தியாக பரப்பி அதன் மூலம் பொது அமைதிக்கும் , பொது ஒழுங்கிற்கும் ஊறு விளைவிப்பவர்களை தண்டிக்கும் வகையில் மேற்கண்ட சட்டப் பிரிவுகள் வகை செய்கிறது . இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க வகை செய்யும். இதான் அந்த சட்டப் பிரிவு சொல்லும்
I need to to thank you for this great read!! I absolutely enjoyed every
bit of it. I’ve got you book-marked to check out new stuff you post…
P.S. If you have a minute, would love your feedback on my
new website re-design. You can find it by searching for “royal cbd” – no sweat if you can’t.
Keep up the good work!
This is my first time go to see at here and i am truly happy to read everthing at single place.