December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

சுய தொழிலை பாதுகாக்க பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை – வெள்ளையன் குற்றசாட்டு

நெல்லை மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நெல்லை டவுனில் வியாபாரிகள் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு திருநெல்வேலி மாவட்ட வர்த்தக கழக தலைவர் ஆர்.காளிதாசன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்துகொண்டு புதிய வியாபாரிகள் சங்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முருகன் என்ற காசி, செயலாளர் திரவிய ராஜா மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் ஆறுமுகம், உறுப்பினர் ராயல்ஸ் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது

ஜாதி மதம் அரசியலைக் கடந்து நாங்கள் நடுநிலையாக செயல்பட்டு வருகிறோம் ஆனால் இன்றைய கால கட்டத்தில் நாட்டு பொருளாதாரம் சரிவு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்ற இந்தியர்கள் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம்

ஆனால் அரசாங்கம் மட்டுமே முடிவெடுத்தால் உடனடியாக இதற்கு தீர்வு காண முடியாத ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்கள் தான் பொருளாதாரத்தை பற்றி கவலைப்படுவதில்லை நாட்டை பற்றி கவலைப்படுவது இல்லை அவர்கள் கவலைப்படுகிறார்கள் அந்நிய நாட்டை பற்றி கவலைப் படுகிறார்கள் அந்நிய நாடுகளில் சில்லறை வணிகம் வளர்ச்சி பெற உதவி செய்கிறார்கள்
தமிழக அரசின் பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் மக்களின் பொருளாதாரத்தை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை மக்களின் சுய தொழில்களை பாதுகாக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும்
ஒவ்வொரு வருடமும் மே 5ஆம் தேதி வணிகர் தினமாக கொண்டாடி வருகிறோம் எந்த ஆண்டு 37வது வணிகர் தின மாநாடு நடத்த உள்ளோம் அடிமை பொருளாதார எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் நடத்த உள்ளோம் கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடத்தினோம் அதற்கு இந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் நடத்தினோம் இந்த ஆண்டு சென்னையில் தீவுத்திடலில் நடத்த உள்ளோம் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற அனைத்து கட்சியினருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம்

அனைத்து கட்சியிலும் எங்கள் பேரவையினர் உள்ளனர் எனவே அனைத்துக் கட்சியினரையும் மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்துள்ளோம்

சென்னையில் நடைபெறும் மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம் அது மக்கள் நலன் சார்ந்ததாக நம் நாட்டு நலன் சார்ந்ததாக நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிவுகள் அமையும் தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் இந்த மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்
சில்லறை வணிகம் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. அந்நிய நாட்டு வணிகத்தை அனுமதித்தது காங்கிரஸ் அதற்கு அடுத்ததாக வந்த பாரதிய ஜனதா அரசு அதனை தடுக்க தவறி விட்டது. ஆன்லைன் வணிகத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது. வெளி நாட்டினர் ஆன்லைன் மூலமாக கவர்ச்சி விளம்பரங்கள் செய்வதால் நம்முடைய சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

சுதந்திர தியாகிகள் பெரும்பாடுபட்டு வெளிநாட்டு காரர்களை துரத்தி அடித்தார்கள் ஆனால் மீண்டும் நம்முடைய நாடு அண்ணிய வியாபாரங்கள் மற்றும் ஆன்லைன் வியாபாரங்கள் மூலம் அவர்கள் கையில் சிக்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு சில்லரை வணிகத்தை அழிக்கும் நோக்கத்தில் அரசின் திட்டங்கள் அமையக்கூடாது.

உள்நாட்டு சில்லரை வணிகத்திற்கு வரிச்சலுகை அளிக்கிறோம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

பிளாஸ்டிக் ஒழிப்பு முறையை ஒழுங்குபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். வெளிநாட்டு கம்பெனியினர் மறுசுழற்சிக்கு உதவாத இயற்கை வளங்களை அழிக்கும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகிறார்கள்.
பிளாஸ்டிக் தடை விதிப்பு முறைகளில் வியாபாரிகளின் நலனுக்காக விதிமுறைகளை தளர்த்த வேண்டும். பாமாயில் கேடு என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பாமாயில் விற்பனைக்கு அரசு தடை விதிக்க வேண்டும்.

பாமாயிலுக்கு பதிலாக கடலை எண்ணெய் நல்லெண்ணெய் எள் எண்ணெய் தேங்காய் எண்ணெய் போன்ற சமையல் எண்ணைகளை வழங்கலாம். இந்த முடிவுகளை அரசு எடுக்கும் பட்சத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பீடி சிகரெட் புகையிலை உடல் நலத்திற்கு கேடு தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

ஆனால் அதை உற்பத்தி செய்யும் இடத்திலேயே ஆட்சியாளர்கள் தடை விதிக்க வேண்டும் உற்பத்தியையும் விநியோகத்தையும் அனுமதித்து விட்டு சில்லறை வணிகர்களை காவல்துறையினர் தொந்தரவு செய்வதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் :-
நெல்லை டேவிட்

error: Content is protected !!
Open chat