December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தென்காசி அருகே விபத்து காப்பற்ற வந்தவர் பலியான சோகம்

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா சிவகிரியில் இருந்த தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அருளாட்சி மெயின் சாலைக்கும்  நடுவில் உள்ள தனியார் கடைக்கு அருகே வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சொகுசு வேனில்
சென்றவர்கள் இன்று காலை 2 மணி அளவில் நிலைதடுமாறி மோதியதில் கார் பழுதாகி நின்றது ,

அதிலிருந்து அவர்களை மாற்று வண்டியில் ஏற்றிவிட்டு கார் டிரைவர் மற்றும் இருவர் மட்டும் பழுதடைந்த கார் சரி செய்வதற்காக ரெக்கவரி வாகனத்திற்கு காத்திருந்துள்ளனர் ,

ரெக்கவரி வாகனம் வந்து பழுதடைந்த ஏற்றிவிட்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் எதிர்பாராத  விதமாக சென்னையிலிருந்து  செங்கோட்டை  போய் க் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர்கள் பரிதாபமாக உடல் நசுங்கி பலியானார்கள்

ஒருவருக்கு தலையில் பலத்த அடியும் மற்றொருவருக்கு உடம்பு முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்

போலீஸார் விசாரணையில் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும்போது கார் பழுதாகி நின்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது பலியானவர்கள் குறித்து முதல் தகவல் அறிக்கையில் ரெக்கவரி  வேன் டிரைவர் சிவகாசி யை சேர்ந்த ராஜசேகர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிஞ்சு,சிஜீதாமஸ் என்று தெரிய வந்துள்ளது

error: Content is protected !!
Open chat