July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நாடு முழுவதும் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது அனைவரும் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொள்வது நல்லது என அரசு அறிவித்துள்ளது இதனால் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் எனஅறிவித்துள்ளது சமூக விலகலே இதற்கு சரியான தீர்வு என அறிவித்துள்ள நிலையில்

சமூக ஆர்வலர் , கல்வியாளர் ,பத்திரிகையாளர். மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் என பன்முகத் தன்மை கொண்டவர் இராஜசேகரன்

தனிமையில் மனிதன் தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்வது ஊரடங்கு நாட்களில் எஞ்சியிருக்கும் மீத நாட்களில் தனிமையை எப்படி இனிமையாக்குவது என்று சொல்லி இருக்கிறார் இதோ அவரின் உற்சாக மொழிகள்

தனிமையை இனிமையாக்குவது எப்படி ?
உலகமெங்கும் இருந்து வரும் தகவல்களை பார்த்தால் தனிமைப்படுத்துதல் தமிழ் புத்தாண்டோடு நிறைவடையுமா அல்லது மேலும் சில காலம் தொடருமா என்பது பாரத பிரதமருக்கும் தமிழக முதல்வருக்கும் தெரியவில்லை தற்போதுு நிலவரப்படி சீனாஇத்தாலியை தாண்டிவைரஸ் உச்சம் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000த்தை நெருங்கி உள்ளது. இந்திய முழுவதும் பல லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப் பில் வைக்கப்பட்டுள்ளனர் .

தமிழகத்தில் பாதிப்பு
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் 20,000 பேரும் நெல்லையில் 2200 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .தமிழகமெங்கும்.1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். .
தமிழகத்தில் இதுவரை 35 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. . பதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய தமிழகமெங்கும் புதிதாக 9 ஆய்வு மையங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் கொரானா படுக்கைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓய்வுவிடுதிகளை தனியாரி மிருந்து கைப்பற்றி மருத்துவமனைகளாக மாற்றுவதற்கான ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த தகவல்கள் நாம் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக செயல்படுவதற்கு மட்டுமே மிரட்டுவதற்கு அல்ல .
அச்சத்தின் உச்சநிலை
தூக்கமின்மை ,மன அழுத்தம் ,மன இறுக்கம் காரணமாக எதிர்மறை சிந்தனை மேலோங்கி பலருக்கு அச்சம் உச்சநிலையை தொட்டுள்ளதாக மனோதத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் . ஹைபோகாண்ரியாஸிஸ் என்று சொல்லக் கூடிய தனக்குத்தானே பயந்து செயலிழக்கக்கூடிய நோய்கள் தாக்கி நகரங்களில் முடங்கிங் கிடப்பவர்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்னர் . எப்பொழுதும் தனிமையை விரும்பாமல் கூட்டமாக நேரத்தை செலவழிப்பவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தகவல்படி சாதாரணமாகவே 2018ல் 60 மில்லியன் மன அழுத்தநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேர்மறை சிந்தனை எப்படி வரும்
வீட்டில் இருந்த படியே தன்னை இயக்கிக்கொள்வதற்கான நேர மேலாண்மையை திட்டமிட வேண்டும். பணிக்கு செல்லும்போது குளித்து வழக்கமான ஆடைகளை அணிவது போல் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பூஜை வழிபாடு ,உடற்பயிற்சி யோகா ,முடித்து காலை உணவு ,செய்தித்தாள் வாசித்தல் ,புத்தகம் படிப்பது , அத்தியவசிய பணிகளை ஆன்லைனில் செய்வது ,மதிய உணவு ,குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ,மனதுக்கு இதமான பழைய திரைப்படங்களைப் பார்பது ,உடல் அசைவையும் மன இசைவையும் தரும் உள் விளையாட்டுக்கள் , நிகழ்சிகளை ஆவணப்படுத்துவது என நாம் தம்மை தயார்படுத்திக்கொண்டால்தான் நீண்டகால ஊரடங்கை எதிர்கொள்ள முடியும்.
மனவலிமை
உடல் வலிமையை விட மனவலிமையே மனிதாபிமானம் ,விவேகம் ,ஊறுவிளைவிக்காத நம்பகத்தன்மை ,இடர்பாடுகளை எதிர்த்துப் போராடும் வல்லமை என எண்ணங்களில் நிரம்பும்போது ஊரடங்கின் முடக்கத்தை உடைத்தெரிய முடியும்.
நாம் இன்றே முயற்சி செய்யலாமே…..

வாருங்கள் தனியே இருந்தாலும் நம்மை உற்சாகப்படுத்தும் இந்த செயல்களை செய்து பார்க்கலாமே

error: Content is protected !!
Open chat