January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ரயிலில் போகவும் இ. பாஸ் வேண்டும்

01.6.2020 முதல் இயக்கப்படும்  சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பாக ரயில் நிலையத்திற்கு வர வேண்டும்.

2. அனைத்து பயணிகளும் மருத்துவ சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்படுவார்கள்.

3. கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

4. ரயில் பெட்டிகளில் உள்ளே நுழையும் போதும், பயணம் செய்யும் போதும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

5. ரயில் நிலையத்திற்கு வரும் போதும், பயணம் செய்யும் போதும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும்.

6. பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

7. பயணச்சீட்டு அடிப்படையிலேயே பயணிகளும் அவர்கள் வரும் வாகனங்களும் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும்.

8. சென்று சேரும் ரயில் நிலையத்திலும் அரசு வரையறுத்துள்ள படி சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

9. நோய் தொற்றைத் தவிர்க்க, பயணிகள்  உணவு  வீட்டிலிருந்து கொண்டு வரலாம்.

error: Content is protected !!
Open chat