January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியில் தமிழக தொல்லியல் துறை தீவிரம்

 

  1. தூத்துக்குடிமாவட்டம் ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி பணியி;ல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் பண்டையர் கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சுமார் 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நிலை குறித்து அறிய வருகிறது. இங்கு இந்திய தொல்லியல்துறையினர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதலோடு தமிழக தொல்லியல் துறை அமைச்சர்; மாஃபா பாண்டியராஜன் உத்தரவின் பேரில் கடந்த 3 மாத காலமாக தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
    இப்பணியில் புவியியல் துறை வரலாற்று பேராசியரியர்கள், வரலாற்று மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 7 இடங்களில் தோண்டி பார்க்கப்பட்டதில் ஓரிடத்தில் பழங்கால கட்டிடம், உறைகிணறு, சுண்ணாம்பு கட்டிடம் தென்பட்டது. மற்றொரு இடத்தில் 3 முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மனிதனின் எலும்பு கூடு, அருகில் உணவு வைத்த மண் சட்டி மற்றும் இறந்த நபர் பயன்படுத்திய ஆபரணங்கள், உடைகள் இருந்தது தெரிய வந்தது. இப்பகுதி இடுகாடாக இருந்திருக்க வேண்டும்.
    கண்டு பிடிக்கப்பட்ட தடயங்கள், பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தால் அவை எத்தனை ஆண்டுகளுக்கு முன் உள்ளது என தெரியவரும் என அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வரலாற்று பேராசிரியர் தெரிவித்தார்.
    மேலும் இவ்விடத்தின் அருகேயுள்ள புளியங்குளம் பகுதியில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு தோண்டி பார்க்கும் பணி நடைபெறுகிறது. இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் அதாவது வசிப்பிடங்கள் காணப்படலாம் என கருதப்படுகிறது.
    இப்பகுதியில் தமிழக தொல்லியல்துறையினர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம் என அவர்கள் கூறினர்.
error: Content is protected !!
Open chat