December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நெல்லை மாநகர துணை ஆணையர் அர்ஜுன் சரவணனின் ஓராண்டு மக்கள் பணி

முதலமைச்சரின் தனி பாராட்டு,இந்திய அளவிலான ஸ்கோச் விருது,

– நெல்லை மாநகர துணை ஆணையர் அர்ஜூன் சரவணனின் ஓராண்டு மக்கள் பணி

நெல்லை மாநகரில் சிறப்பாக பணியாற்றி வரும் மாநகர துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் துணை ஆணையராக பதவி ஏற்று ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ளது.

இந்திய அளவிலான ஸ்கோச் விருது, முதலமைச்சரின் தனி பாராட்டு நெல்லை மக்களின் அன்பு என பல விருதுகளை வென்று அசத்தி வருகிறார்.

பொதுமக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை சமூக அக்கறையுடன் செயல்படுத்தி வருபவர் அர்ஜுன் சரவணன். நேரடியாக புகார் தராவிட்டாலும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் புகார்களுக்கும் உடனடியாக செவி சாய்ந்து அதனை தீர்த்து வைத்து வருகிறார்.

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர், தனது வயது முதிர்த்த பெற்றோர் நெல்லை தச்சநல்லூரில் தனிமையில் இருப்பதாகவும், அவர்களுக்கு உதவுமாறும் ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த அர்ஜுன் சரவணன், தனது குழுவை அனுப்பி அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கியதுடன், தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை பகிர்ந்திருந்தார்.

இவருடைய இந்த செயலை பாராட்டிய தமிழக முதல்வர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்…..

“காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக தங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பானதாக உள்ளது.”

“சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்காக ஓடோடி உதவும் தங்களின் பணி சிறக்கவும், சேவை தொடரவும் எனது வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்!” – என வெகுவாக பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை என்றாலே 10 அடி தூரம் தள்ளியே நிற்கும் பொதுமக்களை தனது புன்னகை முகத்துடன் அருகில் வரவழைத்து அவர்களது புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, காவல்துறை உங்களின் நண்பன் என்பதை செயலில் காட்டி, பொது மக்களின் மனம் கவர்ந்த அதிகாரியாக வலம் வருகிறார் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன்.

இவர் கொண்டு வந்த மக்களுடன் கலந்துரையாடும் ‘மக்களைத் தேடி மாநகர காவல்துறை’, சிசிடிவி கேமிராக்கள் அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் ‘நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை’, முதியவர்களுக்கான ‘வேர்களைத்தேடி’, திருநங்கைகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வரவேற்பை பெற்றுள்ளன.

இவருடைய சமூக செயல்பாடுகளை கண்டு தங்களையும் அதில் இனைத்துக் கொள்ள விரும்பிய நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள், கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திற்க்கு , படம் வெளியான தினத்தில், கட் அவுட், பிளக்ஸ் , பாலாபிஷேகம், என வீன் செலவுகளை தவிர்த்து , துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் , நெல்லை மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 12 CCTV கேமராக்களை வழங்கி அசத்தினர்.

“மக்களைத் தேடி மாநகர காவல்துறை ” என்ற இவரது திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரிகளும் தங்களின் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுடன் ஒவ்வொரு வாரமும் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது.

“மக்களைத் தேடி மாநகர காவல்துறை ” திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியதன் காரணமாக நெல்லை மாநகர காவல்துறைக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் `ஸ்கோச்’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதன் மூலம் நெல்லை மாநகர காவல்துறையினர் பெருமை அடைந்தனர்.

`டியர் டிசி – மதிப்புமிகு மாணவன்’ என்ற திட்டத்தின் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, போக்குவரத்து விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டன. மாணவர்கள் தங்களின் பெற்றோரைத் தலைக்கவசம் அணிய வலியுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. அதைக் கடிதமாக எழுதிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு `மதிப்புமிகு மாணவன்’ என்ற சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.

`நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை’ என்ற திட்டத்தின்படி வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தப்பட்டன.

நெல்லை மாநகரில் `வேர்களைத்தேடி’ என்ற திட்டத்தை காவல்துறை செயல்படுத்தியது. அதன்படி, தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்களின் வீடுகளைக் கணக்கெடுத்து அவர்களிடம் ஒரு புத்தகம் வழங்கப்படும். போலீஸார் வாரந்தோறும் மூத்த குடிமக்களைச் சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

திருநங்கைகளுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கான நிரந்தரத் தொழில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்கான பயிற்சி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்படி சாதாரண நாட்களிலேயே பொதுமக்களுக்காக சேவைகள் செய்து அசத்தும் அர்ஜுன் சரவணன், கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் சும்மா இருப்பாரா? ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே கொண்டு சென்று கொடுக்கும் வகையில் தன்னார்வலர்கள் மூலமாகவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவும் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாராட்டை வெகுவாக பெற்றவர்.

நெல்லை மாநகர காவல்துறையில் துணை ஆணையராக ஓராண்டுக்கு முன்னர் 2019 ஜூலை மாதம் பொறுப்பேற்றவர் சரவணன். அதன் பின்னர் நெல்லை மாநகர காவல்துறையை மெருகேற்றியது மட்டுமல்லாமல் பொதுமக்களின் நலனுக்காவும் பாடுபடத் தொடங்கி ஓராண்டு ஆகி விட்டது. முதல்வரின் வாழ்த்து போலவே “காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக தங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பானதாக உள்ளது” என நெல்லை மக்களின் குரலும் ஏகோபித்து ஒலிக்கிறது. ஒரு வருட அவரின் மக்கள் பணி அவரை கருனையுள்ள,கம்பீரமான காவலனாக மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறது.

You may have missed

error: Content is protected !!
Open chat