December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

பணகுடி 4 வழிச்சாலையில் இரட்டை மேம்பால பணி இன்பதுரை எம்.எல்.ஏ நேரில் ஆய்வு!

பணகுடி 4 வழிச்சாலையில் இரட்டை மேம்பால பணி
இன்பதுரை எம்எல்ஏ நேரில் ஆய்வு!

ராதாபுரம் தொகுதி பணகுடியில் உள்ள நான்கு வழி சாலையில் தொடர்ந்து நடந்து வந்த விபத்துக்களால் உயிர்சேதம் அதிகரித்து வந்தது. எனவே பணகுடி நான்குவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை எம்எல்ஏ தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தார். மேலும் டெல்லியில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்த இன்பதுரை எம்எல்ஏ பணகுடி நான்கு வழி சாலையில் தொடர் விபத்துக்களை தடுக்கும் விதமாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.

இதையடுத்து மத்திய நெடுஞ்சாலைத் துறை சார்பில் பணகுடி நான்கு வழிச்சாலையில் இரட்டை மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்து டெண்டர் விடப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இரட்டை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பணகுடியில் நடந்து வரும் மேம்பால பணிகளை இன்பதுரை எம்எல்ஏ இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு நிருபர்களிடம் பேசிய இன்பதுரை எம்எல்ஏ ” பணகுடி இரட்டை மேம்பாலங்கள் சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக பாலம் அமைக்கும் பணியில் இடையில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

பணகுடி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் வருவதன் மூலமாக அங்கு ஏற்பட்ட விபத்துக்கள் முற்றிலுமாக குறைந்து விடும்.

இந்த பாலங்கள் அமைக்கும் பணியில் முதல் கட்டமாக வட பகுதியிலுள்ள மேம்பாலம் அமைக்கும் பணி வருகிற நவம்பர் மாதம் முடிவடையும். மழைக் காலத்திற்குப் பிறகு தெற்கு பகுதியிலுள்ள மேம்பால பணிகள் வேகம் எடுக்கும் என தெரிவித்தார்

இந்த ஆய்வின்போது இன்பதுரை எம்எல்ஏ உடன் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் களப் பொறியாளர் ஆனந்த் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, நிர்வாகிகள் ஜெகன், சந்திரன், இளையபெருமாள்,கருப்பசாமி, அருண் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat