December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

50 ஆண்டுகால கோரிக்கை: கிராமத்திற்கு சாலை அமைக்க உதவிய இன்பதுரை எம்.எல்.ஏ

50 ஆண்டுகால கோரிக்கை: ஆமையடி கிராமத்திற்கு நேரடி தார்சாலை!ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை அடிக்கல் நாட்டினார்!

ராதாபுரம் தொகுதி கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த ஆமையடி கிராமம். முழுக்க முழுக்க ஆதிதிராவிடர் வசிக்கும் கிராமம் ஆகும்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வள்ளியூர் செல்லவேண்டுமானால் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி கஸ்தூரிரெங்கபுரம் வழியாக கோட்டைகருங்குளம் சென்று வள்ளியூர் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

அதே நேரம் ஊரை ஒட்டிய ஆமையடிகுளம் − கொள்வாய் குளம் ஆகிய இரட்டை குளங்களுக்கு நடுவே கோட்டைகருங்குளத்தை இணைக்கும் ஒரு மண் பாதை நாடு சுதந்திரமடைந்த காலம் தொடங்கி வெகு காலமாக இருந்து வந்துள்ளது. சுமார் இரண்டரை கி.மீ நீளமுள்ள இந்த மண்பாதை வழியாக கோட்டைகருங்குளத்திற்கு எளிதில் சென்றுவிடலாம். இந்த மண்பாதையினை தார்சாலையாக மாற்றித்தர கோரி ஆமையடி மக்கள் கோரியதை தொடர்ந்து கடந்த 1972 வாக்கில் ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி கிணற்று சரல்களை கொட்டி 48 ஆண்டுகளுக்கு முன்பாக மண்சாலை ஒன்றை அமைத்து கொடுத்திருக்கிறார்கள். இந்த மண்சாலையும் ஆமையடி கிராமத்திற்கு வெளியே சுமார் 500மீட்டர் தாண்டியே அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மண்சாலையில் கோட்டை கருங்குளத்திலிருந்து வரும் டூவீலர் ஆட்டோ போன்ற வாகனங்கள் எதுவும் ஊருக்குள் நேரடியாக வரமுடியாததால் எஞ்சிய தூரத்தை பொதுமக்கள் கால்நடையாகத்தான் நடந்து ஊருக்குள் வர முடியும். குறிப்பாக மழைக்காலங்களில் இரு குளங்களும் நிரம்பிய நேரங்களில் மக்களின் பாடு பெரும் திண்டாட்டம்தான்.

எனவே இந்த மண்சாலையை அரசு சீரமைத்து தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்பது ஆமையடி கிராம மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் ஆமையடி மண்சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்கும் திட்டத்திற்கு ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை இன்று அடிக்கல் நாட்டினார்.

புதிய தார்சாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு ஆமையடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் குடும்பமாக கலந்து கொண்டு இன்பதுரை எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு ராதாபுரம் அதிமுக ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா தலைமை தாங்கினார்.நிகழ்சியில் கலந்துகொண்ட 85 வயது முதியவர் சுப்பையா என்பவர் கூறுகையில் இந்த சாலை அமைக்கப்படவேண்டும் என்று காலகாலமாக போராடி வந்தோம். மகப்பேறு போன்ற அவசர காலங்களிலும் கூட 10 கிலோமீட்டர் சுற்றி காட்டுசாலை வழியாகதான் வள்ளியூருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது.

இந்த சாலைக்காக 50 ஆண்டு காலமாக போராடிவந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினராக இன்பதுரை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு நேரில் சென்று தார் சாலை வசதி கேட்டு மனு கொடுத்தோம். அதன் பயனாக இப்போது இந்த சாலை வந்துள்ளது.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு எங்களது கிராமத்துக்கு நேரடி தார் சாலை வசதி அமைத்துத் தந்ததற்காக கிராமத்தின் சார்பாக தமிழக அரசுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

செய்தியாளர்
நெல்லை டேவிட்
error: Content is protected !!
Open chat