October 23, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

போதைப் பொருட்கள் கடத்தல் இருவர் கைது – நெல்லை போலீஸ் அதிரடி

கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு நெல்லை வழியாக குட்கா , பான்மசாலா போதைப் பொருட்கள் கடத்தல் , இரண்டு லாரிகள் நெல்லையில் பிடிபட்டது, ரூ.38 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது

கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு இரண்டு லாரிகளில் கடத்திச் செல்லப்பட்ட ரூ. 38 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்ளை நெல்லை மாநகர போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கரையிருப்பு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரண்டு லாரிகள் நிற்பதாக தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு லாரிகளையும் சோதனையிட்டர் சோதனையில் இரண்டு லாரிகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 38 லட்சம் ரூபாயாகும்.

இதனைத் தொடர்ந்து போலீசார் லாரியில் இருந்த கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் லாரி ஓட்டுனர் ஆகிய 2 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர் மேலும் இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்தனர் இதனைத் தொடர்ந்து உணவு கட்டுப்பாட்டு துறைக்கு போலீசார் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் மற்றும் ஓட்டுனரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரள மாநிலத்திற்கு பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. ராமச்சந்திரன் நெல்லை மாநகர பகுதியில் உள்ள கரையிருப்பை சேர்ந்தவர் என்பதனால் கரையிருப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா பொருட்களை பதுக்கி வைக்க ஏதேனும் குடோன் இருக்கிறதா எனவும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இரண்டு மாநிலங்களில் பல்வேறு சோதனைச் சாவடிகளை தாண்டி கடத்தி கொண்டுவரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் நெல்லை மாநகரில் பிடிபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்தியாளர்
நெல்லை டேவிட்

error: Content is protected !!
Open chat