October 23, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

ஆன்லைன் சதுரங்கப்போட்டி: தென்காசி மாவட்ட வீரர் சாம்பியன்

 

 

 

 

மாநில அளவில் ஆன்லைனில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் தென்காசி மாவட்ட வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சிக்கழகம் மற்றும் நாகர்கோவில் இவான்ஸ் செஸ் கிளப் இணைந்து மாநில அளவிலான ஆன்லைன் தொடர் சதுரங்க போட்டியை நடத்தியது. 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இப்போட்டி 25 நாள்கள் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட வீரர் சத்தியராஜ் சாம்பியன் பட்டம் வென்றார். தஞ்சாவூர் மாவட்ட வீரர் சசிக்குமார் 2ஆவது இடமும், கன்னியாகுமரி மாவட்ட வீரர் ராஜேஷ்கண்ணா 3வது இடமும் பெற்றனர்.
இதே போல் தென்காசி கார்த்திக்ராகுல்,திருநெல்வேலி சித்தார்த், திவ்யா சிவகங்கை திருமலைவாசன், விருதுநகர் ரோகித் ஆகியோர் அந்தந்த மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டனர்.
பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற விழாவில் தென்காசி மாவட்ட அளவில் சிறந்த வீரராக தேர்வு பெற்ற கார்த்திக்ராகுலுக்கு, தெட்சணமாறநாடார்சங்கத்தலைவரும், மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சிக்கழக தலைவருமான ஆர்.கே.காளிதாசன் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில்  இவான்ஸ் செஸ் கிளப் அமைப்பாளர் ஜீவன்குமார், ஐ.பி.எல். செஸ் அகாடமி இயக்குனர் கண்ணன், சாம்பியன் செஸ் அகாடமி இசக்கி, பொதிகை சதுரங்க கழக இணைச்செயலர் முருகேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat