December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

கொரோனாவால் வேலையின்றி தவித்த கூலி தொழிலாளி தற்கொலை

 

 

 

 

வாசுதேவநல்லூர்அருகே கொரோனாவால்வேலையின்றி தவித்த கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள திருமலாபுரம் என்ற அருளாச்சி மதுரைவீரன் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி மகன் வடகாசி (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கு மகாலெட்சுமி என்ற மனைவியும், 2 வயதில்மகனும் உள்ளனர். தற்போது கொரோனாவால் வேலை இன்றி வடகாசி கஷ்டப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. குடிப்பதற்கு பணம் இல்லாமலும் இருந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த வடகாசி விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வடகாசி பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர்காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அலெக்ஸ்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
error: Content is protected !!
Open chat