November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பரிசு வழங்கி பாராட்டும் மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சரவணன்

மனித நேயத்தோடு மக்களை அணுகும் நெல்லை மாநகரகாவல் துணை ஆணையாளர்

மூதாட்டிக்கு உதவ செய்ய சென்ற வாலிபருக்கு அபராதம் விதிப்பு மனிதநேயத்துடன் அபராதத்தை ரத்து செய்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையருக்கு நன்றி தெரிவித்த வாலிபர்

திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 24 இவர் லேப்டாப் சர்வீஸ் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு சுமார் 10 மணிக்கு வேலையை முடித்துக்கொண்டு மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வண்ணார்பேட்டை பகுதியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கூறிக்கொண்டிருந்தார். இதனை மணிகண்டன் அந்த மூதாட்டியை அந்த மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நெல்லை டவுனில் உள்ள அவரது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

டவுன் பொருட்காட்சி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வாகன சோதனை ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்ற மணிகண்டன் வாகனத்தை நிறுத்தி அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

அப்போது மணிகண்டன் இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவி செய்வதற்காக சென்று கொண்டிருக்கிறேன் என போலீசாரிடம் கூறினார். எனினும் போலீசார் அவருக்கு அபராதம் விதித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான மணிகண்டன் தனது சமூக வலைதள பக்கத்தில் உதவி செய்ய சென்ற எனக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து விட்டார்கள் என வேதனையுடன் பதிவு செய்திருந்தார்.

பரிசு வழங்கி பாராட்டும் மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சரவணன்

இதுகுறித்து அறிந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் வயது முதிர்ந்த மூதாட்டி உதவி செய்யும் நோக்கில் சென்ற வாலிபர் மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய முடிவு செய்தார்.

துணை ஆணையர் சரவணன் ஆலோசனையின் பெயரில் நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ் தனது அலுவலகத்திற்கு வாலிபர் மணிகண்டனை நேரில் வரவழைத்து இனிமேல் வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது எனக் அறிவுரை கூறி அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாக கூறினார்.

மூதாட்டிக்கு உதவி செய்ய சென்ற வாலிபருக்கு காவல்துறையின் நடவடிக்கை நெல்லை மாநகர மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் வாலிபர் மணிகண்டன் தனது தந்தையுடன் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு இன்று காலை நேரில் சென்று துணை ஆணையர் சரவணன் அவர்களை நேரில் சந்தித்து மனிதநேயத்துடன் அபராத தொகையை ரத்து செய்து நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அப்போது காவல் துணை ஆணையர் சரவணன் அவர்கள் வாகனம் கிடைக்காமல் இரவுநேரத்தில் தவித்த மூதாட்டிக்கு உதவி செய்ததை பாராட்டி மணிகண்டனுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!
Open chat