December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

வேளாண் சட்ட மசோதா விவசாயிகளுக்கு சிறிய பாதிப்பு என்றாலும் தேமுதிக வரவேற்காது

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதக பாதகங்களை ஆராய விவசாய அமைப்புக்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை

வேளாண் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த சட்டத்தால் ஏற்படும் சாதக பாதகங்களை தெளிவாக ஆராய மத்திய மாநில அரசுகள் குழு அமைத்து, அந்த சட்டத்தால் மக்களுக்கு என்ன பலன், என்ன நன்மை என்ன தீமை என்பதை அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், விவசாய பெருமக்களுக்கு அனைத்து வகையிலும் பயனளிக்கும் வகையில் அமைந்தால் வேளாண் சட்ட மசோதாவை தேமுதிக வரவேற்கும் என்றும், எந்த விதத்திலாவது ஒரு சிறிய பாதிப்பு இருக்குமேயானாலும் கூட அதனை தேமுதிக வரவேற்காது.

மேலும், புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு, வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு என அனைத்திற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அதில் உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இல்லையென்றால் எது உண்மை, எது பொய் என்பது மக்களுக்கு புரியாமலேயே போய்விடும். எனவே தமிழக அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தி, புதிய கல்விக்கொள்கையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவையும், அதேபோல், வேளாண் சட்டத்தில் உள்ள நிறை குறைகளை ஆராய விவசாய அமைப்புகள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து, இதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

error: Content is protected !!
Open chat