December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பொதுமக்கள் குறைகள் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் தென்காசி ஆட்சியர் அறிவிப்பு

 

 

 

பொதுமக்களின் குறைகளை தீர்க்க மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 9443620761 என்ற அலைபேசி எண்ணில் வாட்ஸ்அப்  மூலமாகவும்,  collector.grievance@gmail.com

 என்ற இமெயில் மூலமாகவும், மேலும் https://gdp.tn.gov.in
 என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புகார் மனுக்களை கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியர் அளவிலான ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். பெறப்படும் மனுக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் துணை ஆட்சியாளர்களால்  வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை  ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
வரும் 28.09.2020 அன்று சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்ட  மனுக்கள் மீது துணை ஆட்சியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன்; பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட அலுவலர்களிடம் ஆய்வுமேற்கொள்வார். மேலும் சிவகிரி தாலுகாவில் வைத்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்றுக்கொள்வார்;.
இதன்மூலம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து திங்கட்கிழமை மனு அளிப்பதற்கு பதிலாக தாலுகா அலுவலகங்களில் திங்கள்கிழமை சென்று மனுக்களை அளிக்கவேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும் எனவும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையவழியினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் கேட்டுக்கொண்டுள்ளார்;.

error: Content is protected !!
Open chat