தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 22-ம் மியாட் மருத்துவமனையில் வழக்கமாக உடல் பரிசோதனை செய்ய சென்றிருந்தார் அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்தது உடன் அத்ற்கான சிகிட்சை மேற்கொண்டார்
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய் தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துச் சேவைகளினால் அவர் நல்ல முன்னேற்றமடைந்திருக்கிறார் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து , இன்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், தேமுதிக தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளருமான திரு.விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளருமான திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இருவரும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ குழுவினரால் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்தனர். இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தன்மூலம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது
விரைவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு
அ.தி.மு.க.வுக்கு அறிவுரை கூற குருமூர்த்தி யார்? வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி