December 2, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தடுமாறும் இளைஞர்கள் வழிகாட்டும் நெல்லை காவல்துறை

தடுமாறும் இளைஞர்கள் வழிகாட்டும் நெல்லை காவல்துறை

நெல்லை மாநகர காவல்துறை, அரோரா மற்றும் அன்னை தெரசா பொது நல அறக்கட்டளைகள் சார்பாக ஏழ்மையான,தேர்வில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகள்,தி௫நங்கைகளை தேர்ந்தெடுத்து காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் பயிலரங்கம் இன்று துவக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணன் பேசுகையில்
திருநெல்வேலி மாநகர இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய மாநகர காவல்துறை எப்போதும் துணைநிற்கும். காவலர் தேர்விற்கு நீங்கள் தயார் செய்ய அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்கிறோம். நன்றாக படிப்பது மட்டுமே உங்களது பணி. இரண்டு மாத காலத்திற்கு உங்கள் விளையாட்டு, நட்பு, காதல், பகை அனைத்தையும் ஒத்தி வையுங்கள் . காவலர் தேர்வில் மட்டும் கவனம் செலுத்துங்கள் .
புத்திசாலிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துகின்றன கொள்கிறார்கள் . நீங்கள் புத்திசாலிகள் என நிரூபிக்க வேண்டும் . 11000 காலிப் பணியிடங்கள் என்பது அரிய வாய்ப்பு .தமிழக காவல்துறையில் பணியாற்ற பெண்களையும், திருநங்கைகளையும் வரவேற்கிறேன்.அடுத்த ஆண்டு நீங்கள் அனைவரும் காக்கி சீருடை அணிந்து பணியில்ல சேரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் .
இந்த நிகழ்வில் நெல்லை டவுன் உதவி ஆணையர் தி௫.சதீஷ் குமார் முன்னிலை வகிதார். ம.தி.தா இந்து பள்ளி நிர்வாகம், மயன் ரமேஷ் ராஜா, Smart leaders அகாடமி சிவராஜ் வேல், மற்றும் ஆசிரியர்கள் கொம்மையா,இளையராஜா,சரவணன், நிஜாமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அரோரா அறக்கட்டளை இயக்குனர் விக்னேஷ், ஓ௫ங்கிணைப்பாளர் திவ்யா இதற்கான ஏற்பாடுகளை செய்தி௫ந்தனர். அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை இயக்குநர் க.மகேஷ் நன்றியுரை கூறினார்.

You may have missed

error: Content is protected !!
Open chat