December 2, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

இராதாபுரம் தொகுதி பணகுடியில் பல்கலைக்கழக கல்லூரி கட்டிடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்


இராதாபுரம் தொகுதி திசையன்விளை- பணகுடியில்ரூ 6 கோடி செலவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி கட்டிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

ராதாபுரம் தொகுதி பணகுடி மற்றும் திசையன்விளையில் தலா ரூ 3 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொலி காட்சி வாயிலாக இன்று காலை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பணகுடியில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான ஐ.எஸ் இன்பதுரை புதிய கல்லூரியில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்லூரியில் மொத்தம் 13 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. தரைதளத்தில் ரூ. 1கோடி செலவில் 3 வகுப்பறைகள், ஒரு ஆசிரியர் அறை, முன்புறத்தில் வராண்டா மற்றும் மாணவ மாணவியர், ஆசிரியர், அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் மாலரசு,அண்ணா கல்லூரி முதல்வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான சுப்பிரமணியபிள்ளை, ராதாபுரம் வட்டாட்சியர் கனகராஜ்,ஓய்வு பெற்ற நீதிபதி ஜோசப், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் யூசுப், பொதுப்பணித் துறை தொழில்நுட்பக் கல்விக் கோட்ட செயற்பொறியாளர் சத்தியவாகீஸ்வரன், உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர்,
வள்ளியூர் ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம் அந்தோணி அமலராஜா வள்ளியூர் மார்க்கெட் சொசைட்டி தலைவர் முருகேசன் அரசு வழக்கறிஞர் கல்யாணகுமார் அதிமுக நிர்வாகிகள் சீனிவாசன், ஜெகன், தங்க சாமி, ஐயப்பன், இளையபெருமாள், எட்வர்டு சிங், கல்யாணசுந்தரம், அருண்குமார், முத்துக்குட்டி, நேவிஷன் கோபாலகிருஷ்ணன், ரமேஷ், சுடலை கண்ணு, காவைபாலன், கூடங்குளம் துரைசிங், பொன் பாண்டி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

You may have missed

error: Content is protected !!
Open chat