October 27, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

 

 

 

 

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு செங்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் செ‌கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா அறிவுறுத்தலின்பேரில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடுவார் என அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர அதிமுக அவைத்தலைவர் தங்கவேலு, பொருளாளர் வீ.ராஜா, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் கணேசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் ஜாஹீர்உசேன், நகர எம்ஜீஆர் இளைஞரணி செயலாளர் சக்திவேல், மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் மணி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் கனியத்தா, இராஜகோபாலன், திலகர், செந்தில்ஆறுமுகம்,

 

மாவட்ட பிரதிநிதி மைதீன்பிச்சை, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜேஸ்வரன், மாணவரணி ரகுமத்துல்லா, முத்துராமன், ஐயப்பன், கோவிந்தன், பரமசிவன், சுப்பிரமணியன், சுப்புராஜ், முத்துராமலிங்கம், குமார், ஜவஹர் மற்றும் வார்டு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat