October 31, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நடமாடும் ரேஷன் கடை திறப்பு

நெல்லை கொண்டாநகரம் கிராமத்தில் நகரும் நியாய விலை கடை திறப்பு

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் கிராமத்தில் நகரும் நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.
மானூர் பொது வினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் பொன்ராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கள அலுவலர் வின்சன்ட், சுத்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் இசக்கி பாண்டியன், ஊராட்சி செயலர் முத்துராமன் மற்றும் கொண்டாநகரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மாரியப்பன், துணைத் தலைவர் ஆவுடையப்பன்,செயலாளர் டேனியல்ஆசீர், பொருளாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மானூர் பொதுவிநியோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் பொன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 110 நியாயவிலைக் கடைகளை திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் திருநெல்வேலியில் மட்டும் 64 கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மானூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் 18 நகரும் நியாய விலைக் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டு இன்று 6 கடைகள் திறக்கப் பட்டுள்ளது என்றார்.

error: Content is protected !!
Open chat