December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

இராமநாதபுரம் மழை மாரியம்மன் கோவிலில்  புரட்டாசி பொங்கல் திருவிழா

 

 

 

சிவகிரி அருகே இராமநாதபுரம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மழை மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
அக். 15ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது .
அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் இப்பகுதி யில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருள்மிகு ஸ்ரீ சிவவாக்கிய சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மழை மாரியம்மனுக்கு தீர்த்தம் எடுத்தல், பால்குடம்  எடுத்தல் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கணபதி ஹோமம், மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது .ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
 இரண்டாம் நாளான சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பாமா ருக்மணிக்கு  சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பாமாருக்மணி சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது.
இரவில் அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ண பகவான் கருட வாகனத்தில் எழுந்தருளி தரிசனம் நடைபெற்றது.
 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ஸ்ரீ பால முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.  அருள்மிகு பால முருகன் மயில் வாகனத்தில் தரிசனம் கொடுத்தார்.
  திங்கட்கிழமைஅருள்மிகு ஸ்ரீ மழை மாரியம்மன் ஆலய தீர்த்தம் எடுத்தல், பால்குடம் அழைத்தல், மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாள் மூலஸ்தான அமைப்புஸ்ரீ மீனாட்சியாக காட்சி காட்சி தருதல், மாலை 5 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ மழை மாரியம்மன் திருக்கோயிலில் வைத்து திருவிளக்கு பூசை நடைபெறுகிறது. இதனை தென்காசி ராஜா பட்டர் நடத்தி வைக்கிறார். இரவு 10 மணிக்கு அருள்மிகு மழை மாரியம்மன் தட்டு சப்பரத்தில் தரிசனம் கொடுக்கிறார்.
  செவ்வாய்க்கிழமை(13ம் தேதி) ஸ்ரீ மழை மாரியம்மன் பூபல்லக்கு  தரிசனம் தருகிறார் . புதன்கிழமை புலியாட்டம்,  சிலம் பாட்டம்,  இவற்றுடன் பொங்கல் பானை அழைத்தல், அக்னி சட்டி எடுத்தல், பறவை காவடி எடுத்தல், இரவில் பக்தர்களுக்கு கயிறு குத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஸ்ரீ மழை மாரியம்மன் சிங்க வாகனத்தில் தரிசனம் கொடுக்கிறார்.
வியாழக்கிழமை பொங்கல்பானை அழைத்தல், முளைப்பாரி அழைத்தல், மஞ்சள் நீராட்டு விழா மலரை கிடைத்தல் ஆகியவை நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் இந்து நாடார் உறவின் முறை கமிட்டியார் மற்றும் விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
error: Content is protected !!
Open chat