October 23, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தந்தையை கம்பால் அடித்து கொலை செய்த மகன் கைது

 

 

 

 

தென்காசி மாவட்டம் சின்னக்கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊத்தங்குளம் நடுத்தெருவில் வசித்து வருபவர் மாடப்பன் மகன் செல்வராஜ். இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் தனது தந்தையிடம் அடிக்கடி பணம் பெற்று ஊதாரித்தனமாக செலவு செய்து வந்துள்ளார். மேலும் தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும்படி அவர் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
அதற்கு மாடப்பன் வேலைக்குச் செல்லாதவனுக்கு பெண் யார் கொடுப்பார்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் கம்பால் தனது தந்தையை சரமாரியாக அடித்துள்ளார். இதில் மாடப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாடப்பன் மகள் சின்னகோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் மீனாட்சிநாதன் வழக்கு பதிவு செய்து மாடப்பன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தந்தையை கொலை செய்த செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!
Open chat