October 23, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்ட கோவில் அறங்காவலர்களை நியமனம் செய்திடும் மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கலாம்

 

 

 

 

 

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்திடும் மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரூ. 10 இலட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருவாய் பெறும் சட்டப்பிரிவுகள் 49(i)இ 46(i) & 46(ii)-ன் கீழ் உள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட “மாவட்டக் குழு” அரசால் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது.

மேற்படி மாவட்ட குழு உறுப்பினர்களுக்கு தகுதிவாய்ந்த இந்து சமயத்தைச் சார்ந்த 25 வயது பூர்த்தியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்படி விண்ணப்பதாரர்கள் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 7(A) சட்டப்பிரிவு 26 மற்றும் சட்டப்பிரிவு 47- ல் தெரிவிக்கப்பட்டுள்ள தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும்.

மாவட்ட அறங்காவலர் குழு நியமன உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், ஏ.ஆர்.லைன் ரோடு, பாளைங்கோட்டை, திருநெல்வேலி – 2 என்ற முகவரிக்கு 27.10.2020 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக அனுப்பி வைத்திட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் இதர விபரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர்கள் அலுவலகங்களில் அலுவலக நாட்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat