October 23, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மாங்காய்கள் திருடிய 3 பேர் கைது

 

 

 

 

 

தென்காசி அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து மாங்காய்களை திருடிய 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி அருகேயுள்ள சாம்பவர்வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலாயுதபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் மாந்தோப்பு குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த தோப்பிற்குள் சாம்பவர்வடகரையைச் சேர்ந்த சண்முகவேல் மகன் அம்ஜத்  (எ) நாகராஜ் (வயது 35), ஆறுமுகம் மகன் பாஸ்கர் (28), மாரியப்பன் மகன் விக்னே~; (21) ஆகிய 3 பேர்களும் சென்று மாங்காய்களை திருடியுள்ளனர்.
இதுகுறித்து மகேந்திரன் சாம்பவர்வடகரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். உதவி ஆய்வாளர் செல்வி வழக்கு பதிவு செய்து மாங்காய்கள் திருடிய அம்ஜத் (எ) நாகராஜ், பாஸ்கர், விக்னே~; ஆகிய 3 பேர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவர்களில் அம்ஜத் (எ) நாகராஜ், பாஸ்கர் ஆகியோர் மீது ரவுடி சரித்திர பதிவேடு துவக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள் ஆவர். இவ்விருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Open chat