December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

வாசுதேவநல்லூரில் வேனில் இருந்த ரூ.1.50 லட்சம் கொள்ளை

 

 

 

 

 

வாசுவேநல்லூரில் வேனில்; இருந்த ரூ.1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள நல்வாச்சாலை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் கிருஷ்ணசாமி (வயது 31). இவர் சிந்தாமணியைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது வெடிமருந்து கிடங்கில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். கிறிஸ்து ராஜபுரம் குடோனில் இருந்து சவுந்தர் ரெட்டியார்  டிரைவரிடம் ரூ.1.50லட்சம் பணம் பெற்றுக் கொண்டு வேனில் கிருஷ்ணசாமி திரும்பி வந்துள்ளார்.
அவர் வாசுதேவநல்லூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அருகே வேனை நிறுத்திவிட்டு கடைக்கு பூட்டு வாங்கச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வேனில் இருந்த ரூ.1.50 ஆயிரத்தை வைத்திருந்த பேக்கை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட கிருஷ்ணசாமி தீவிரமாக பணம் வைத்திருந்த பேக்கை தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதுகுறித்து இரண்டு நாட்கள் கழித்து கிருஷ்ணசாமி வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உதவி ஆய்வாளர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து வேனில் இருந்த ரூ.1.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை வலை வீசி தேடி வருகிறார்.

error: Content is protected !!
Open chat