October 23, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்டத்தில்   இன்று 17 பேருக்கு கொரோனா   தொற்று 

 

 

 

 

தென்காசி மாவட்டத்தில் இன்று 17 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதனால்  பாதிப்பு எண்ணிக்கை 7,630 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் குணமடைந்தோர் 7,301 பேர்கள் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 181 பேர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திற்கு இதுவரை 15,128 பேர்கள் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர்.  இவர்கள்  அனைவரும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அரசு கோவிட்-19 மையத்தில் ஒருவர் உள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை1,02,643 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 787 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  50 பேர்கள் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டனர்.
இன்று 17 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலங்குளத்தில்
ஒருவரும், கடையத்தில் 5 பேர்களும்,
கீழப்பாவூரில்  2 பேர்களும், கடையநல்லூரில்  3 பேர்களும்,  மேலநீலிதநல்லூரில் ஒருவரும்,
சங்கரன்கோவிலில் ஒருவரும்,
தென்காசியில்  2 பேர்களும்,
வாசுதேவநல்லூரில்  2 பேர்களும்,
 இன்று கொரோனா  தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர் .
 42 பேர்கள் கொரோனா அறிகுறியுடன் மருத்துவ பரிசோதனைக்கு வந்தனர். 4 பேர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  7,630 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பூர்ண குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை  7,301 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும்  21 பேர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.   181  பேர்கள்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
error: Content is protected !!
Open chat