January 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி ஆர்.டி.ஓ., உறுதிமொழியை ஏற்று காத்திருப்பு போராட்டத்தை கைவிட்ட கரும்பு விவசாயிகள் 

 

 

 

 

தென்காசி ஆர்.டி.ஓ.,உறுதிமொழி கடிதத்தை ஏற்றுக் கொண்டு காத்திருப்பு போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள்தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 2017 முதல் நடப்பு ஆண்டு வரை கொள்முதல் செய்த கரும்புகளுக்கு விவசாயிகளுக்கு தொகை வழங்கவில்லை. இதுவரை ரூ.24 கோடி நிலுவைத் தொகை உள்ளது. இத்தொகையை வழங்க கோரி பலமுறை கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், போராட்டம் நடத்தியும் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
இதனால் கரும்பு விவசாயிகள்தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர்அய்யாக்கண்ணு தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.24 கோடியை உடனே வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கடந்த 12ம் தேதி தொடங்கிய போராட்டம் இரண்டாம் நாளாக 13ம் தேதியும் தொடர்ந்தது.

 

இந்நிலையில் தென்காசி கோட்டாட்சித்தலைவர் பழனிகுமார் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திரராஜாவிற்கு எழுதியுள்ள உறுதிமொழி கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லுாரில் செயல்பட்டு வரும் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கான கரும்பு கொள்முதல் நிலுவைத் தொகையினை உரிய காலத்தில் வழங்கவில்லை என்றும் பலமுறை மேற்படி நிலுவைத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்தும் இதுவரை வழங்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட விவசாயிகள் சங்கம் சார்பாக 12.10.2020 தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக போரட்டம் நடத்தினர்.
அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய்த்துறை, விவசாயத்துறை, காவல்துறை, விவசாய சங்கத்தினை சேர்ந்த 11 நபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் மேற்படி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையினை 30.10.2020-க்குள் வழங்கப்படும் என்று ஆலை நிர்வாகத்தினரால் உறுதி அளிக்கப்பட்டது.
மேற்படி ஆலை குறிப்பிட்ட காலத்தில் நிலுவைத்தொகையை அளிக்க தவறும்பட்சத்தில், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சித் தலைவர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்ட கரும்பு விவசாயிகள் தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர். இதனால் இரண்டு நாட்கள் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

error: Content is protected !!
Open chat