October 31, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தேவேந்திரகுலவேளாளன் சாதி பெயர் வைத்தால் சாகும்வரை உண்ணாவிரதம்

தேவேந்திரகுல வேளாளன் சாதி என பெயர் வைக்க கூடாது. மீறி பெயர் வைத்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என அகிலபாரத குர்மி, குடும்பர் சத்திரிய மகாசபா தமிழக செயலாளரும் ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளருமான எஸ்.சிவஜெயப்பிரகாஷ் கூறினார்.

இதுகுறித்து அவர் தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது:

எந்த தமிழ் சாதிகளுக்கும் அல்லது எவற்றிற்கும் தேவேந்திரன், தேவேந்திரகுலத்தான், தேவேந்திரகுல வேளாளன் என்ற பெயர்கள் தலைப்பு சாதியாக வைக்கக் கூடாது. இந்தியா முழுவதும் பரவி வாழும் நூற்றுக்கும் மேலான கிளைகள் கொண்ட ஒரே சாதியான குர்மி, குடும்பர், மள்ளர், பள்ளர் சாதிகளின் கிளைகளைக் கண்டறிந்து அவற்றிற்கு குர்மி அல்லது குடும்பர் அல்லது மள்ளர் என்ற தலைப்பில் பெயர் வைக்க வேண்டும். தேவேந்திரகுல வேளாளன் இந்திய ஒருமைப்பாட்டை உடைக்கும் பெயர். இப்பெயர் நீக்கப்பட வேண்டும். இதுகுறித்து நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு விசாரணையில் உள்ளது.

முன்னாள் எம்.பி.யும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பீட்டர் அல்போன்ஸ், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரை தங்கராஜ் ஆகியோருக்கு 7 சாதிக்கு தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் சம்பந்தமாக அரசிடம் கோரிக்கை வைக்க உரிமை கிடையாது. மள்ளர், பள்ளர் முதலாக 29 சாதிகளை குடுர்மி, குடும்பர் என்ற தலைப்பில் வைக்க தஞ்சையில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில் தேவேந்திரகுலம் என்று எங்கும் கூறப்படவில்லை . இப்பெயர் தமிழ்நாட்டில் மட்டும் இருப்பதால் அது இந்திய ஒருமைப்பாட்டை உடைக்கும் பெயராகும். இந்தியாவில் மள்ளர் குடும்பர் குல வரலாறு உள்ளது. தமிழகத்தில் மள்ளர் பள்ளராக்கப்பட்ட வரலாறு உள்ளது. ஆனால் தேவேந்திரகுல வேளாளர் என்ற வரலாறு கிடையாது. மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பும் பெற்றுள்ளேன். வேறு எந்த பெயரும் மதுரை விமானநிலையத்திற்கு சூட்டக் கூடாது.

தென்காசி மாவட்டம் சிவகிரி தலையணை பகுதியில் அணை கட்டப்பட வேண்டும். அங்கு உற்பத்தியாகும் ஆற்று நீர் கோளா நோக்கிச் செல்வது தடுக்கப்பட வேண்டும். தேவேந்திரகுல வேளாளன் பெயர் வைக்கப்பட்டாலோ, மதுரை விமானநிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர் தவிர வேறு பெயர் சூட்டப்பட்டாலோ தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவில் முன்பு நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். இவ்வாறு அகில பாரத தர்மி, குடும்பர் சத்திரிய மகாசபா தமிழக செயலாளரும், ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் காண்காணிப்பாளருமான எஸ்.சிவஜெயப்பிரகாஷ் கூறினார்.

error: Content is protected !!
Open chat