October 27, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்-கவிஞர் வைரமுத்து

இலங்கை கிரிக்கெட் அணியின் வேக பந்து வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் எடுக்கப்பட. உள்ளது இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த திரைப்படத்தில் படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படதிற்கான அறிவிப்பு வெளியானமுதலே எதிர்ப்பும் வெளியாக துவங்கியது தமிழ் திரையுலகில் பலரும் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர் இயக்குனர்  இமயம் பாரதிராஜா, இயக்குனர் சேரன் பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி அவர் யோசித்து செயல் பட வேண்டும். எனவும் ஒட்டுமொத்த உணர்வாளர்களின் உணர்வுகளை மதிக்கவேண்டிய இடத்தில் அவர் உள்ளார். என தனது கருத்தை தெரிவித்து இருந்தார்
இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில்
கலையாளர்
விஜய் சேதுபதிக்கு…
சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.
நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?
இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி.@VijaySethuOffl
என தனது வேண்டுகோளை பதிவு செய்துள்ளார்

“>

error: Content is protected !!
Open chat