October 27, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மென்பொருள் நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு குறித்து கலந்துரையாடல்  அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி பங்கேற்பு

 

மென்பொருள் கட்டுமான நிறுவனத்தினை கிராமபுறங்களில் நிறுவி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி  தென்காசி ஷோகோ மென்பொருள் கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் மத்தாளம் பாறை அருகில்  ஷோகோ மென்பொருள் கட்டுமான நிறுவனத்தில் மென்பொருள் கட்டுமான நிறுவனத்தினை கிராமபுறங்களில் நிறுவி கிராமபுற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்வி.எம்.ராஜலெட்சுமி ; முன்னிலையில் ஷோகோ  மென்பொருள்  நிறுவனர் ஸ்ரீதர்வேம்புடன்  நடைபெற்றது.
தமிழக அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன்,சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வாசுதேவநல்லூர் மனோகரன், மதுரை தெற்கு டாக்டர்சரவணன் ஆகியோர் கலந்துரையாடலின் போது உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது ணுழுர்ழு மென்பொருள் கட்டுமான நிறுவனரை சந்தித்து தமிழகத்தில் கிராமபுறங்கள் மென்பொருள் கட்டுமானங்களை நிறுவி கிராமபுற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்க வேண்டுமென கேட்டுகொண்டார். மேலும், அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து ஷோகோ மென்பொருள் கட்டுமான நிறுவனங்கள் பெருநகரங்களில் இருந்து கிராமபுறங்களை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களை தேர்வு செய்து கிராமபுற இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சிறப்பான பயிற்சி அளித்து திறமையானவர்களாக உருவாக்கி மென்பொருள் கட்டுமான துறையில் பணியமர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகளவில்  மென்பொருள் கட்டுமான துறையில் பணிபுரிவோர் பல்வேறு கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டினை மாறாமல் மென்பொருள் கட்டுமான துறையில் வெற்றி பெருவதற்காக தமிழ அரசுடன் இணைந்து கிராமபுறங்களில் இளைஞர்களுக்கு மென்பொருள் துறையில் வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, திட்ட இயக்குநர் சரவணன்,  தென்காசி கோட்டாட்சியர் பழனிக்குமார், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா ;, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம், அரசு வழக்கறிஞர்கள் கார்த்திக்குமார், சின்னத்துரை பாண்டியன், ஆவின் ;ரமேஷ், ஆறுமுகம்,  தென்காசி ஒன்றிய அதிமுக செயலாளர் சங்கரபாண்டியன், நகர செயலாளர் சுடலை,  அமல்ராஜ்,  குற்றாலம் செயலாளர் கணேஷ்தாமோதரன், இலஞ்சி மயில்வேலன், முத்தராஜன், கந்தசாமிபாண்டியன், வாசுதேவநல்லூர் மூர்த்திபாண்டியன், வெங்கடடேசன் உட்பட அலுவலர்கள், ஷோகோ நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!
Open chat