October 25, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை- தென்காசி ஆட்சியர் தகவர்

 

 

 

 

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர்;, பார்சி மற்றும் ஜைன மதத்;தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மைய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-21 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் / ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின்  www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 135127 மாணவ மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவிதொகை வழங்க மைய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இக் கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். இக்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ மாணவியர்கள் 31.10.2020 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும். மாணவ மாணவியரின் ஆதார் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலணை செய்யும் அலுவலர்களுக்கு இணையதளத்தால்;;; பகிரப்படமாட்டாது.

மைய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (NSP) இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்கள்  கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ( Nodal Officer ) விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும்;. புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCVT  குறியீட்டு எண்ணை மாணவியர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள்  http//www.minorityaffairs.gov.in/schemes/என்ற இணையதளத்தில்; வெளியிடப்;பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat