October 25, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சிவகிரி, வாசு.,வில் அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா: எம்.எல்.ஏ., மனோகரன் பங்கேற்பு

 

 

 

 

 

 

சிவகிரி, வாசுதேவநல்லூரில் நடைபெற்ற அதிமுக 49வது ஆண்டு துவக்க விழாவில் எம்.எல்.ஏ.,மனோகரன் கலந்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி பஸ்ஸ்டாண்ட் முன்பு அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ., மனோகரன் தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்;., ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்சவுக்கை வெங்கடேசன், வாசுதேவநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர் மூர்த்தி பாண்டியன், முன்னாள் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் துரைப்பாண்டியன்,  எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர்கள் ராஜேந்திரன், ஆயில்ராஜா பாண்டியன், சின்னத்துரை, பேரூர் செயலாளர்கள் வாசு., சீமான் மணிகண்டன், சிவகிரி காசிராஜன், ராயகிரி சேவுகப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கம் பிச்சையா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மருதுபாண்டியன், சிவகிரி நகர ஜெ.,பேரவை செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஆனந்தன், ஆசிரியர் ராமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர் பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., மனோகரன் தலைமை  வகித்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி முன்னாள் தலைவர் சசிகுமார், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் மாங்கனி முருகையா, நகர அவைத்தலைவர் நீராவி, பொருளாளர் திவான் மைதீன், ஜெ.,பேரவை செயலாளர் முருகையா, இலக்கிய அணி ராஜ், அரிசிக்கடை மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat