October 22, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி தெற்கு மாவட்டத்தில்  49 இடங்களில்  அதிமுக கொடியேற்று விழா. மாவட்ட செயலாளர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ  கொடியேற்றினார்

 

 

 

 

அதிமுக 49 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்டத்தில் அனைத்து நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி ஊராட்சி பகுதிகளிலும் மொத்தம்   49 இடங்களில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ அதிமுக கொடியேற்றினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க அதிமுக 49 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட பகுதிகளில்  49 இடங்களில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது.
அதன்படி  இலஞ்சி, காசிமேஜர்புரம், குற்றாலம்,  மேலகரம், தென்காசி  நகரம், சுந்தரபாண்டியபுரம், கீழப்பாவூர், முத்துகிருஷ்ணப்பேரி, கீழச்சுரண்டை,,  பல பத்திரராமபுரம், ஆலங்குளம், காளாத்திமடம், பாப்பாக்குடி, முக்கூடல், ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், வெய்க்காலிப்பட்டி, அரியப்பபுரம்,  உள்ளிட்ட  49 இடங்களில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ அதிமுக  கொடிகளை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக பொருளாளர் இலஞ்சி எஸ் கே சண்முகசுந்தரம், அண்ணா தொழிற்சங்க மண்டலச் செயலாளர் கே.கந்தசாமி பாண்டியன், தென்காசி ஒன்றிய செயலாளர் எஸ்.சங்கரபாண்டியன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆ.அமல்ராஜ், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.இருளப்பன்,  ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எச்.எம். பாண்டியன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.கனகராஜ் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் வசந்த முத்துப்பாண்டி பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் டி.கே. சுப்பிரமணியன்,  கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்டி அருவேல்ராஜ், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி. முருகேசன், தென்காசி நகர அதிமுக செயலாளர் வே.சுடலை, மேலகரம் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக் குமார்,  இலஞ்சி பேரூர் செயலாளர் மயில் வேலன்,  குற்றாலம் பேரூர் செயலாளர்
 எம்.கணேஷ் தாமோதரன், சுந்தரபாண்டியபுரம் பேரூர் செயலாளர் எஸ்.முத்துராஜன், சுரண்டை பேரூர் செயலாளர் வி கே எஸ் சக்திவேல்,  ஆலங்குளம் பேரூர் கழக செயலாளர் கே.பி. சுப்பிரமணியன், கிழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் எஸ்.ஜெயராமன், முக்கூடல் பேரூர் கழக செயலாளர் மரிசேசையா, ஆழ்வார்குறிச்சி பேரூர் கழக செயலாளர் எஸ் சங்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
error: Content is protected !!
Open chat