December 2, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்கள் உற்பத்தி பெருக்கும் திட்டம்-ஆட்சித்தலைவர்

 

 

 

 

தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்கள் உற்பத்தி பெருக்கும்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மீன்வளத்துறையின் மூலம் தென்காசி மாவட்டத்தில் மீன்கள் உற்பத்தி பெருக்கும் தி;ட்டத்தின் கீழ்; மீன் உற்பத்தியினை பெருக்கிட 2021 முதல் 2025 வரை 5 ஆண்டுகளுக்கு கீழ்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
1. புதுமையான மீன்வளர்ப்பிற்கான பயோ ப்ஃளாக்  தொழில்நுட்பம்
2. புதிய மீன்வளர்ப்பு குளங்கள் நிர்மாணித்தல்
3. மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு மானியம் வழங்குதல்
4. அலங்கார மீன்வளர்ப்பு மேற்கொள்ளுதல்
5. உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன் போக்குவரத்து வாகனம் வழங்குதல்

6.  உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு மீன்பிடி திறனை அதிகரிக்க
மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல்
இத்திட்டத்தில் அரசின் மூலம் பொது பிரிவினருக்கு 40சதவீத மானியத்திலும், எஸ்.சி/எஸ்.டி/மகளிருக்கு 60சதவீத மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் பயனாளிகள் உள்நாட்டு மீனவர்கள்/ அல்லது மீன்பண்ணையாளர்கள், உற்பத்தியாளர்கள், மீன்பிடி தொழிலாளி, மீன்விற்பனையாளர், மகளிர் சுயஉதவிக்குழு, உள்நாட்டு ;மீனவர் கூட்டுறவு சங்கம், மீனவர் கூட்டுறவு இணையம், தொழில்முனைவோர் / தனியார் ஆகவோ இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் பராமரிக்கப்பட்டு முன்னுரிமை வழங்கப்படும்.  மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள்  பெற்றிட கீழ்காணும் முகவரியில் உள்ள திருநெல்வேலி மீன்துறை உதவி இயக்குநர் (உள்நாட்டு மீன்வளம்) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,
42 சி, 26வது குறுக்கு தெரு,
மகாராஜா நகர்,
திருநெல்வேலி -627 011.
தொலைபேசி எண்: 0462 258 1488
கைப்பேசி எண் : 9384824280
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

You may have missed

error: Content is protected !!
Open chat