October 25, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

காதல் திருமணம் செய்ய உதவிய நபர்களை தாக்கியவர்கள் கைது

காதல் திருமணம் செய்துகொள்வதற்கு உதவிய நபர்களை தாக்கிய பெண்ணின் தந்தை உட்பட 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல அரியப்பபுரம் பகுதியில் வெண்ணிலா(21) என்ற பெண் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அப்பெண்ணின் தந்தையான முருகன் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார், இதைத்தொடர்ந்து வெண்ணிலா அதே பகுதியில் வசித்து வரும் சுரேஷ் (23) என்ற நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

 

இதை அறிந்த அப்பெண்ணின் தந்தை முருகன் தன் மகள் காதல் திருமணம் செய்ய உதவியது அதே பகுதியில் உள்ள குமரேசன் என அறிந்த அப்பெண்ணின் தந்தை உட்பட 5 நபர்கள் குமரேசனின் வீட்டு கதவை தட்டி அங்கிருந்த குமரேசன் மற்றும் அவரது அண்ணன் செல்வராஜ் ஆகியோரை கைகளால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

 

இதுகுறித்து குமரேசன் கொடுத்த புகாரின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன் விசாரணை மேற்கொண்டு மேற்படி நபர்களான முருகன்(49), லக்ஷ்மணன்(43), தினேஷ்(23), மகாராஜன்(36) மற்றும் சரவணன்(21) ஆகிய 5 நபர்கள் மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது சிறையில் அடைத்தார். மேலும் இதில் காதல் திருமணம் செய்துகொண்ட சுரேஷ் என்பவர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Open chat