October 22, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

குற்றாலத்தில் கராத்தே பயிற்சி ஆசிரியா்கள் மாவட்ட செயற்குழு கூட்டம் 

தென்காசி மாவட்டம் குற்றாலம் நகரிய துவக்கப்பள்ளியில் வைத்து இன்டோ ஷாவலின் இண்டா்நேஷனல் கராத்தே, குங்பு அசோசிசன் சார்பில் தென்காசி, திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு    இன்டோ    ஷாவலின் இண்டா்நேஷனல் கராத்தே, குங்பு அசோசிசன்
மாநில தலைவா் ராமராஜ் தலைமைதாங்கினார்.  சங்கத்தின் செயலாளா் வீரபாண்டியன் முன்னிலைவகித்தார். மாநில துணைச்செயலாளா் பிரகாஷ் வரவேற்று பேசினார்.
அதனைதொடா்ந்து கீழ்க்கண்ட  தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்ற பட்டது. அசோசியேசன் 25 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்துவது என்றும், 2 வது கருப்பு பட்டைக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்க ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த கராத்தே, குங்பூ பயிற்சி ஆசிரியா்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா். முடிவில் பயிற்சி ஆசிரியா் பாக்கியராஜ் நன்றி கூறினார்.
error: Content is protected !!
Open chat