October 22, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சென்னையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 26 புல்லட் இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 7 குற்றவாளிகள் கைது. ரூ.40 லட்சம் மதிப்புள்ள 26 புல்லட் இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது. 7 நபர்களை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை நேரில் அழைத்து காவல் ஆணையாளர் பாராட்டினார். 

சென்னையில் திருடு போன இருசக்கர வாகனங்களை மீட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப உத்தரவிட்டதின்பேரில், கிழக்கு மண்டலத்தில் உதவி ஆய்வாளர் .சுதாகர் (G-7 சேத்துப்பட்டு காவல் நிலையம்) மற்றும் E-4 அபிராமபுரம் தலைமை காவலர் R.சரவணக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சம்பவ இடங்களின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு,

இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 1).முகமதுஷபி, வ/27, 2).சிபி, வ/23, 3).அமீர்ஜான், வ/36,4).ஜமால் (எ) ஜமாலுதீன், வ/39, 5).சையத் இப்ராகிம், வ/30, 6).கதிரவன்,வ/29 மற்றும் 7).அமீர், வ/25 ஆகிய 7 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 26 புல்லட் இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப  நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

error: Content is protected !!
Open chat