January 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்டத்தில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்  ஆட்சியர் தகவல் –

 

 

 

 

தென்காசி மாவட்டத்தில் 5 இடங்களில் வரும் 28 -10- 2020 புதன்கிழமை அன்று விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.
 இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜிகே .அருண்சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள
 செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது .-
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம் .தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இக் கூட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை.
இந்நிலையில் காணொளிக் காட்சி மூலம் தென்காசி மாவட்டத்தில் கீழ்க்காணும் ஐந்து இடங்களில் வரும் 28- 10- 2020 அன்று காலை 11 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எனது தலைமையில் வேளாண்மைத்துறை- தோட்டக்கலைத் துறை- மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர் .
எனவே விவசாயிகள் தங்கள் மனுக்களுடன் கீழ்காணும் ஊர்களிலுள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் காணொளிக்காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
தென்காசி, செங்கோட்டை வட்டார விவசாயிகள் தென்காசி யிலும் -கடையநல்லூர்- வாசுதேவநல்லூர் வட்டார விவசாயிகள் கடையநல்லூரிலும்,  கடையம்- ஆலங்குளம் -கீழப்பாவூர் வட்டார விவசாயிகள் கீழப்பாவூரிலும்,  சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் சங்கரன்கோவிலிலும், குருவிகுளம்- மேலநீலிதநல்லூர் வட்டார விவசாயிகள் குருவிகுளத்திலும் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!
Open chat