December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே தாய் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை மனநலம் பாதித்த மகன் தீக்குளிப்பு

 

 

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே தூங்கிக் கொண்டிருந்த தாய் தலையில் அம்மிக்கல்லை  போட்டு;கொலை செய்த மனநலம் பாதித்த மகன் தீக்குளித்ததால்படுகாயமடைந்தார்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கடங்கநேரி கிராமம் அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி இசக்கியம்மாள் வயது (48). இவர்களின்  மகன் மணிரத்தினம் (27)
மணிரத்தினம் சில மாத காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று

வீட்டில் பாயில் படுத்து தூங்கிகொண்டு இருந்த இசக்கியம்மாள் தலையில் மணிரத்தினம் அம்மி கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த இசக்கியம்மாள் ரத்த வெள்ளத்தி;ல் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
தாயை கொலை செய்த மணிரத்தினம் தானகவே தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம்பக்கத்தினர்  மணிரத்தினத்தை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊத்துமலை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் தனலெட்சுமி மணிகண்டன் வழக்கு பதிவு செய்து இசக்கியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!
Open chat