February 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நகரும் நியாய விலை கடை இன்பதுரை எம்எல்ஏ துவக்கிவைத்தார்

ராதாபுரம் தொகுதி வள்ளியூர் ஒன்றியம் தண்டையார் குளத்தில் புதிய நகரும் நியாய விலை கடை துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்பதுரை எம்எல்ஏ வந்தபோது தண்டையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் பொதுமக்களும் பெருந்திரளாக குழுமி நின்று ஊர் எல்லையில் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இன்பதுரை தண்டையார் குளம் பகுதி மக்கள் இதுவரை 4 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பணகுடிக்கு நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வரும் நிலைமை இருந்தது
எந்த வீட்டிலும் பசி பட்டினி இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் 25 கிலோ அரிசியை விலை இல்லாமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தந்து வந்தார்கள். ஆனால் அந்த அரிசியை பெறுவதற்காக முதியவர்களும் பெண்களும் கர்ப்பிணிகளும் நெடுந்தொலைவு பசியோடு நடந்து சென்று பெற்று வருகிற கஷ்ட நிலைமை இருந்தது இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் வழி வந்த புரட்சித்தலைவியின் வாரிசாக இருக்கிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த நகரும் ரேஷன் கடை திட்டத்தை தமிழக மக்களின் நலனுக்காக அறிவித்து உள்ளார்கள்
இனிமேல் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக கிராம பகுதியில் உள்ள மக்கள் நெடுந்தொலைவு நடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. தங்களது ஊர்களில் தத்தமது பகுதிகளிலேயே அரிசி முதலான ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள இந்த திட்டம் வழிவகை செய்கிறது என இன்பதுரை எம்எல்ஏ கூறினார்
இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, நாங்குநேரி ராதாபுரம் தாலுகாக்கள் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் முருகேசன், பணகுடி மார்க்கெட் சொசைட்டி தலைவர் தங்கசாமி, துணைத்தலைவர் இளைய பெருமாள், சீனிவாசன், டிடி லாரன்ஸ், ஜெகன், ஜெயினுலாபுதீன், பொன் பாண்டி, ஐயப்பன், கோபாலகிருஷ்ணன்,வக்கீல் ராஜா, கருப்பசாமி, கல்யாணசுந்தரம், அருண், சிவா, சுடலை கண்ணு, ராசையா, ஆட்டோ மணி, ரவி, நாராயணசாமி, ராஜலிங்கம் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat