December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

குற்றாலத்தில் கத்தி முனையில் இளைஞரிடம் ரூ45 லட்சம் கொள்ளை 5 பேர் கைது 

 

 

 

குற்றாலத்தில் நூதன முறையில் பேசி இளைஞரிடம் கத்திமுனையில் ரூபாய் 45 லட்சத்தை கொள்ளையடித்த ஐந்து பேர் கும்பலை குற்றாலம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வள்ளுவன்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபூர் (வயது 35) இவர் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் பகுதியை சேர்ந்த நாகூர் மீரான் (வயது 43) என்பவர் தனக்கு சொந்தமான வீட்டை விலைக்கு விற்கப் போவதாக கூறியுள்ளார். அதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் கபூர் என்பவர் வல்ல விலைக்கு வாங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அந்த வீட்டை விலைக்கு வாங்க முன்பணமாக ரூபாய் 45 லட்சத்தை கொடுப்பதற்காக அப்துல் கபூர் நேற்று  கொண்டு வந்துள்ளார். அவரிடம் நாகூர் மீரான் மேலகரம் மின் நகர் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அப்துல்கபூர் ரூபாய் 45 லட்சம் பணத்துடன் மின் நகர் பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.அப்போது அந்த பகுதிக்கு வந்த நாகூர்மீரான் மற்றும் அவரோடு வந்த கழுகுமலை அனில்குமார் (வயது50) கேரள மாநிலம் கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்த நாசீர் (வயது 48) இலஞ்சி மணிகண்டன் (வயது 29) சதீஷ்குமார் (வயது 23) ஆகியோர் கத்திமுனையில் அப்துல் கபூரை மிரட்டி அவர் காரில் வைத்திருந்த ரூபாய் 45 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதுபற்றி அப்துல்கபூர் உடனடியாக குற்றாலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று ரூ.45 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய 5 பேர்களை கைது செய்து
அவர்களிடமிருந்து ரூபாய் 45 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat