January 16, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தேவிபட்டணம்செங்குளம் கால்வாயில் தென்காசி ஆட்சியர் ஆய்வு

 

 

 

தேவிபட்டணம் செங்குளம் கால்வாய் பகுதியை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம்அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில்பேச்சியம்மன் கோவில் ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆற்றில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செங்குளம் கால்வாய் மூலம் வருகிறது. இக்கால்வாய் மூலம் செங்குளத்தில் 55 ஹெக்டேர் பரப்பளவும், வேப்பங்குளம், ராயண்ணிபேரி, சமூகநேரி, சம்ம ஓடைகுளம், பெரியகுளம் ஆகியவற்றின் மூலம் 550 ஹெக்டேர் பரப்பளவும் பாசன வசதி பெறுகிறது.
செங்குளம் கால்வாய் ஒரு பகுதி மேடாகவும், மற்றொரு பகுதி பள்ளமாகவும் இருப்பதால் மழை காலங்களில் ஒரு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இந்த கால்வாய் துவங்கும் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதி சீரமைத்து அனைத்து குளங்களுக்கும் சீராக தண்ணீர் வரத்து ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் செங்குளம் கால்வாய் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கால்வாய் பகுதியை ஜெ.சி.பி.,இயந்திரம் மூலம் சிரமைக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். விரைவில் இப்பணி துவங்க இருக்கிறது.

மாவட்ட ஆட்சியரின் ஆய்வின் போது சிவகிரி தாசி;ல்தார் ஆனந்த், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜா, வனத்துரை ரேஞ்சர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ்ஆகியோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!
Open chat