January 16, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

வாசுதேவநல்லூர் அருகே கிணற்றிற்குள் டிராக்டர் விழுந்து விவசாயி பலி

 

வாசுதேவநல்லூர் அருகே கிணற்றிற்குள் டிராக்டர் விழுந்ததில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தும்பைமேடு முருகன்கோவில் தெருவில் வசித்தவர் ராமர் மகன் ராமபாண்டி (வயது 50). விவசாயி. இவர் டி. ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாவிற்குச் சொந்தமான ஏமன்பட்டி அருகேயுள்ள வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
இன்று ராமபாண்டி தனக்குச் சொந்தமான டிராக்டரை ஓட்டு வயலில் உள்ள கிணற்று அருகே நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கிணற்றிற்குள் விழுந்தது. இதில் படுகாயமடைந்த ராமபாண்டி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர்செல்வமுருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ராமபாண்டி உடலை மீட்டனர். டிராக்டரை உடனடியாக மீட்க முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தன் வழக்கு பதிவு செய்து ராமபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!
Open chat