December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

சங்கையில் திமுக வர்த்தகர் அணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்

 

 

திமுக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் டாக்டர் ச.அய்யாத்துரை பாண்டியனின்
 ஏ.வெங்கடேஷ் குமார் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் சங்கரன்கோவில் ஏவிகே கல்வி குழும வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாமை திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
நெல்லை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொ. சிவபத்மநாதன், வெங்கடேஷ்குமார் நினைவு அறக்கட்டளை அறங்காவலர்கள் அல்லிராணி, டாக்டர் சரண்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர் வெங்கடேஷ் குமார் மெமோரியல் டிரஸ்ட் நிறுவனர் அய்யாத்துரை பாண்டியன்  வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி  பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார்,  முன்னாள் எம்.பி தங்கவேலு உள்பட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:-
வேலைவாய்ப்பு முகாமில் உரையாற்றும் அய்யாதுரை பாண்டியன்

கல்வியை ஒரு தொழிலாக இல்லாமல் மக்கள் சேவையாக நினைத்து செயல்படக்கூடிய உள்ளம் கொண்டவர் நம்முடைய அன்பிற்கினிய அய்யாதுரை பாண்டியன்.கல்விப் பணியையும் அரசியல் பணியையும் இரு கண்களாக கருதி செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய அவருடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
 இந்த நாட்டில் வேலைக்கு  அதிகமான அளவிற்கு பஞ்சம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் புதிய வேலை வாய்ப்பு  உருவாக்கி தருவதில்  மிகப்பெரிய தோல்வி அடைந்திருக்கிறார்கள்.
 ஏற்கனவே இருந்த நிறுவனங்களைக் காப்பாற்ற அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த சூழலில்தான் இதுபோன்ற வேலைவாய்ப்புகள் காலத்தின் தேவையாக இருக்கின்றன. இந்த முகாமுக்கு வருகை தந்து பங்கேற்று இருக்கக்கூடிய 50 நிறுவனங்களுக்கும் அவருடைய நிர்வாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்று சொல்வதே அரிய வார்த்தையாய் இருக்கக்கூடிய காலம். இந்த காலத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த வந்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குறிய ஒன்றாக இருக்கிறது. பல்வேறு கனவுகளோடு நம்முடைய இளைஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். உங்களுடைய படிப்பு,  விருப்பம்  கனவுகளுக்கு ஏற்ற வேலைகளை தேர்ந்தெடுங்கள். முன்னேற்றத்துக்கு முதல்படி வேலைவாய்ப்பு.  உங்களுடைய ஊதியத்தை நம்பி உங்கள் குடும்பம் காத்திருக்கலாம்.
ஏராளமான கடமைகளும் காத்திருக்கிறது. இவை அனைத்துக்கும் ஒரு தொடக்கப்புள்ளி இந்த வேலைவாய்ப்பு முகாம்.  இன்னும் சில மாதங்கள் கழித்து  எங்காவது ஒரு ஊரில் நீங்கள் என்னை சந்திக்கும் பொழுது தென்காசி வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தீர்களே அதில் வேலை கிடைத்து. இன்று நன்றாக இருக்கிறேன் என்று கூறினால் அதை விட மகிழ்ச்சிக்குறிய செய்தி நிச்சயம் வேறு  இருக்க முடியாது.
எனவே அனைவரும் படிக்க வேண்டும். அனைவரும் வேலைக்கு போகவேண்டும். கல்வி வேலைவாய்ப்பு பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதை ஆட்சியின் இலக்கணமாக கலைஞர் வைத்துக்கொண்டார்.
 தமிழகத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்தது பெருந்தலைவர் காமராஜர் என்று சொன்னால் ஏராளமான கல்லூரிகளை திறந்து வைத்தது  கலைஞர். இந்திய மாநிலங்களிலேயே முதல்முதலா ஐடி துறையை  உருவாக்கிச் அரசுத் துறையை கம்ப்யூட்டர் மயமாக்க முனைந்தார். 640 கோடி ரூபாய் மதிப்பில் டைடல் பார்க் 2000 ஆண்டில் கலைஞர்தான் உருவாக்கினார்.  உலகத் தமிழ் இணைய பல்கலை கழகத்தை உருவாக்கி தந்தார்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி மையங்கள் உருவாக்கித் தந்தார். திமுக ஆட்சி இருந்தபோது 632 நிறுவனங்களை கலைஞர் ஏற்படுத்திக் கொடுத்தார்.  ஒரே இடத்தில் அனைத்து தொழில்களும் நடக்கக்கூடிய சிப்காட் உருவாக்கியவர் கலைஞர்  ராணிப்பேட்டை, ஓசூர், திருபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, கும்மிடிப்பூண்டியில் தொழில் வளாகம் கட்டிக் கொடுத்தார்.
மிட்சுபிஷி, ஹூண்டாய் தொழிற்சாலைகள் வந்தது.
 வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று இருக்கக்கூடிய இளைஞர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அதே நேரத்தில் இந்த சிறப்பான வேலைவாய்ப்பு முகாமை உருவாக்கியது இருக்கக்கூடிய  அய்யாத்துரை பாண்டியன் அவருக்கு துணை நிற்கக் கூடிய அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பேசினார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 50 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. வேலைவாய்ப்புக்காக 5000 இளைஞர்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.   1500 பேருக்கு வேலை உறுதி கடிதம் வழங்கப்பட்டது.
error: Content is protected !!
Open chat