November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

விராலிமலையில் ஜல்லிக்ட்டுகாளை, மாடுபிடி வீரர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

 

 

 

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்குவது போன்று நிறுவப்பட்டுள்ள வெண்கலச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:
வீரமிகு விராலிமலை மண்ணில் பிறந்த அனைவருக்கும் உள்ள வீரத்தை பறைசாற்றுகிற விதமாக, விராலிமலை முருகன் கோவிலுக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள, வீரமிகு இளைஞர் காளையை அடக்குகின்ற சிலையை, தத்ரூபமான காட்சியை உங்கள் மனதில் நிற்கின்ற அளவிற்கு அமைத்திருக்கின்றார்கள்.
இந்த மண்ணில் பிறந்த இளைஞர்கள் வலிமை மிக்க காளைகளை அடக்கக்கூடிய வீரமிக்க இளைஞர்கள், அவர்களை பாராட்டுகின்றேன். விவசாயிகள் அதிகமாக வசிக்கின்ற இந்தப் பகுதி மக்களுக்கு அம்மா கண்ட கனவை நனவாக்குகின்ற விதமாக காவேரி-குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும்.
இது மக்கள் மற்றும் விவசாயிகளின் கனவுத் திட்டம். நீண்ட காலமாக வானம் பார்த்த பூமியாக இருக்கின்ற புதுக்கோட்டை மாவட்டத்தை வளம்மிக்க பூமியாக மாற்ற அம்மாவின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவேரி-குண்டாறு திட்டத் ற்கு கால்வாய் அமைப்பதற்கான நில ஆர்ஜிதப் பணி முடிந்தவுடன் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு நானே நேரடியாக வருவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் பூமி பசுமையான பூமியாக மாறும். வேளாண் பெருமக்கள் கண்ட கனவை அம்மாவின் அரசு நிறைவேற்றித்தரும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

error: Content is protected !!
Open chat