January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சங்கரன்கோவிலில் அரசு பள்ளி கட்டிடம், உடற்பயிற்சி கூடம் திறப்பு அமைச்சர் ராஜலெட்சுமி திறந்தார்

 

 

 

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில்  சங்கரன்கோவில் நகராட்சி அரசு நடுநிலைபள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடத்தினை  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  திறந்து வைத்தார்;.
சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து, சங்கரன்கோவில் நகராட்சி காந்தி நகர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.8 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.
மேலும், சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதி இளைஞர்களின் கோரிக்கையினை ஏற்று ரூ.10 இலட்சம் மதிப்பில் இளைஞர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு அச்சக சங்கத்தலைவர் திரு.கண்ணன் (எ)ராஜி,  சங்கரன்கோவில் ஆணையாளர் (பொறுப்பு) முகைதீன் அப்துல் காதர், நெல்லை பேரங்காடி துணைத்தலைவர் வேல்சாமி, நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆறுமுகம்,  முன்னாள் ஆவின் தலைவர்  ரமேஷ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்  சுப்பையா பாணடியன் உட்பட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat